Poems



THE DAFFODILS; OR, I WANDERED LONELY AS A CLOUD
by: William Wordsworth (1770-1850)
      WANDERED lonely as a cloud
      That floats on high o'er vales and hills,
      When all at once I saw a crowd,
      A host, of golden daffodils;
      Beside the lake, beneath the trees,
      Fluttering and dancing in the breeze.
       
      Continuous as the stars that shine
      And twinkle on the milky way,
      They stretched in never-ending line
      Along the margin of the bay:
      Ten thousand saw I at a glance,
      Tossing their heads in sprightly dance.
       
      The waves beside them danced; but they
      Out-did the sparkling waves in glee
      A poet could not but be gay,
      In such a jocund company
      I gazed -- and gazed -- but little thought
      What wealth the show to me had brought:
       
      For oft, when on my couch I lie
      In vacant or in pensive mood,
      They flash upon that inward eye
      Which is the bliss of solitude;
      And then my heart with pleasure fills,
      And dances with the daffodils.

கவிதை


நிலவின் ஒளியினைப் பருகி

லயித்த பனித்துளியொன்று

பாய்ந்து பளிச்சிடுகிறதென்

அந்தரங்க வெளியினில்

காலத்தின் பிரக்ஞையற்று

பட்டாம்பூச்சியாய்

திசைகளெங்கும் சிதறடிக்கும் என்னிடம்

நிறங்களுதிர்த்து நிர்வாணியாய் திரியென்று

மகரந்தம் பரவிய விரல்களினால்

சமிக்ஞை செய்கிறாய்

நிமிடத்தில் நிறைவேற்றி

உனைத்தீண்ட முயல்கையில் உடலுதிர்த்து வரும்படி

கட்டளையிடுகிறாய்

ஆட்சேபணைகளின்றி அடிபணிகிறேன்

உன் இம்சைகளைக் கொண்டாடுவதில்

பூரணமடைகிறதென் காதல்

என்னுயிர் நாதத்திலிருந்து ஒலிக்கிறது

உனக்கான வசியப்பாடல்

ஒளி உமிழும் இதழ்களுடன்

கணநேரத்தில் ஓராயிரம் அபிநயங்களுடன்

நர்த்தனம் புரிந்து

வண்ணத்தீற்றல்களுக்கு இடையே

மலராக மின்னி மறைகிறாய்

மகரந்தவாசம் நிரம்பியயென்

வெளியெங்கிலும்

பொழிகிறது தேன் துளிகள்.






 People are often unreasonable, illogical, and self centered;
Forgive them anyway.
If you are kind, People may accuse you of selfish, ulterior motives;
Be kind anyway.
If you are successful, you will win some false friends and some true enemies;
Succeed anyway.
If you are honest and frank, people may cheat you;
Be honest and frank anyway.
What you spend years building, someone could destroy overnight;
Build anyway.
If you find serenity and happiness, they may be jealous;
Be happy anyway.
The good you do today, people will often forget tomorrow;
Do good anyway.
Give the world the best you have, at it may never be enough;
Give the world the best you've anyway.
You see, in the final analysis it is between you and God;
It was never between you and them anyway.

                   -Mother Terasa






எலிகளுக்கும் எனக்கும் மட்டுமே தெரியும்

ருசிகண்ட பூனையின் வருகை குறித்து

இருட்டைக் கிழித்து ஒளிரும் கண்களில்

தேடலின் தீவிரம் வழிய

பதுங்கிப் பாய்ந்து

மதில்மீதேறி நிதானித்து நகரும்

கயிற்றின் மீது நடக்கும்

தேர்ந்த வித்தைக்காரியின் சாகசத்தை விஞ்சி

அசட்டையுடன் இரையின் மீதே

கவனம் நீளும்.

பூனையின் ஆளுமையை பதிவு செய்வதற்கான

ஆவலில் ஒரு வெள்ளைத்தாளில்

ஓவியமாக்கும் முயற்சியில்

தாளின் மையத்திலிருந்து

மதில்சுவர் வரையும் பொழுதில்

நீளும் கோட்டின் மீது

பூனையின் கர்வம் மிளிர

நகர்கிறது பேனாமுனை.


வழியனுப்புதல்


தாயிழந்த பூனைக்குட்டியின் நாக்கில்
பாலில் நனைத்த பஞ்சினை
ஒத்தியெடுத்து பசிதீர்ப்பதுபோல்
உன் பிரிவிற்கான காரணத்தை
விரிவாகக் கூறியென்னை
சமாதானப்படுத்துகிறாய்…
உனது இருப்பை வசப்படுத்தும்
முயற்சியில் தீவிரமடைகின்றன
எனது புலன்கள்…
பிரிவிற்குப்பின்
சூழவிருக்கும்
வெறுமைக்கு அஞ்சி
உடைபடுகின்றன்
எல்லா நிமிடங்களும்…
நிகழ்வுகளுடன் தொடர்பற்றதாய்
நீண்ட கதையாடல்களுக்கிடையில்
ஒலிக்கிறது உன் சிரிப்பொலி…
என் மவுனத்தை
உடைக்க வழிநெடுகிலும்
ஏதேதோ பேசிகிறாய்
புல்லாங்குழல் விற்பவனின்
வாசிப்பில் ஜீவனிருப்பதாய்
வியந்து பூரிக்கிறாய்…
புறப்படும் நேரத்தில்
மழையடித்து ஓய்ந்தது போல்
மெளனித்துச் செல்கிறாய்
மிகமிக அருகில்
நிகழ்கிறது நம் பிரிவு…
வழியனுப்பிவிட்டுத்
திரும்புகையில்
கடைசி நிமிடங்களில்
நீ உதிர்த்த மவுனத்தில்
பொதிந்த வார்த்தைகளை
வழிநெடுகிலும் தேடிகிறேன்…
தாயிழந்த பூனைக்குட்டியின் நாக்கில்
பாலில் நனைத்த பஞ்சினை
ஒத்தியெடுத்து பசிதீர்ப்பதுபோல்
உன் பிரிவிற்கான காரணத்தை
விரிவாகக் கூறியென்னை
சமாதானப்படுத்துகிறாய்…
உனது இருப்பை வசப்படுத்தும்
முயற்சியில் தீவிரமடைகின்றன
எனது புலன்கள்…
பிரிவிற்குப்பின்
சூழவிருக்கும்
வெறுமைக்கு அஞ்சி
உடைபடுகின்றன்
எல்லா நிமிடங்களும்…
நிகழ்வுகளுடன் தொடர்பற்றதாய்
நீண்ட கதையாடல்களுக்கிடையில்
ஒலிக்கிறது உன் சிரிப்பொலி…
என் மவுனத்தை
உடைக்க வழிநெடுகிலும்
ஏதேதோ பேசிகிறாய்
புல்லாங்குழல் விற்பவனின்
வாசிப்பில் ஜீவனிருப்பதாய்
வியந்து பூரிக்கிறாய்…
புறப்படும் நேரத்தில்
மழையடித்து ஓய்ந்தது போல்
மெளனித்துச் செல்கிறாய்
மிகமிக அருகில்
நிகழ்கிறது நம் பிரிவு…
வழியனுப்பிவிட்டுத்
திரும்புகையில்
கடைசி நிமிடங்களில்
நீ உதிர்த்த மவுனத்தில்
பொதிந்த வார்த்தைகளை
வழிநெடுகிலும் தேடிகிறேன்…


பிரிவு


மழைநீர் தேங்கிய குட்டையின்

சேற்றுப்படுகையிலிருந்து நீளும்

கருவேலங்குச்சியின் விளிம்பில்

தவமிருக்கும் தும்பியின்

தனிமைச் சோகத்தை தாளாது

கனத்து கருத்ததொரு அந்தியில்

நிகழ்கிறது நம் பிரிவு

எளிதில் எல்லாவற்றையும்

உதறிச் செல்கிறாய்

ஒரு குழந்தை

சென்றதற்கான

அத்தனை தடயங்களுடனும்

நிசப்தம் நிரம்பிய அறையாய்

கலைந்து கிடக்கிறேன்.



No comments:

Post a Comment